Wednesday, February 06, 2013

பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்

பிரபல வலைப்பதிவாளர், அருமை நண்பர் டோண்டு ராகவன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னளவில் இது மிகப் பெரிய இழப்பு! இன்று காலை 11 மணி அளவில் தகனம். 2004-ல் என் வலைப்பதிவை பார்த்து விட்டு, தானும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றவன் என்று சொல்லி என்னுடன் அறிமுகமானார். அப்போது அவர் எனக்கு எழுதிய முதல் மடல் இது !

Triplicane memories and greetings from Dondu 

From narasimhan raghavan

To balaji_ammu@yahoo.com

Dear Balaji,
Yesterday I came to Triplicane. Had a leisurely walk down Pycrofts Road browsing the books in the platform shops. As I passed the Neeli Veerasami Chetty Street cutting, I thought of you but could not make it to your place as I do not know your address. It is also possible that you might have been still at office (5PM). If you have no objection, do email me your residential phone number and address. I will come to your place next time I come that side, if I may.

Do drop in at my place in Nanganallur. (20/B-23, 15th Cross Street, Hindu Colony, Opposite the new Nanganallur bus terminus). You have my telephone numbers already. Your blog about Vegundu was quite good.

Regards, N.Raghavan

என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகியிருக்கிறார். நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவர். அசாத்தியமான மன உறுதி கொண்டவர். சுறுசுறுப்பின் இன்னொரு பெயர் டோண்டு என்று கூட சொல்லலாம். தமிழ் வலையுலகில் அவரது பிரபலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை!  இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் கூட தன் வலைப்பதிவில் ஒரு இடுகையை பதிந்திருக்கிறார்!  8+ ஆண்டுகளில் சுமார்  1000 இடுகைகள் பதிந்திருப்பார் என்பது என் அனுமானம்.

புற்று நோயை எதிர்த்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர். அந்த கடினமான கால கட்டத்தில் கூட இயல்பாக இருக்கவே செய்தார் என்று நான் அறிவேன். இறுதி வரை கடுமையாக உழைத்திருக்கிறார். பல முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். என் குழந்தைகள் அவரது ரசிகைகள்! சமீபத்தில் (அவருக்குப் பிடித்தமானவார்த்தை இது!) மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா அவரை யாரென்று கண்டு கொண்டபோது, சந்தோஷம் அவருக்கு.

அந்த ஒரு முறை தான், நடப்பது கூட பிரயத்தனமாக இருப்பதாகக் கூறினார். அயற்சி என்றே கூறாதவர் அப்படி சொன்னபோது, மனது சங்கடப்பட்டது. எனது வலைப்பதிவு மூலம் செய்து வந்த சமூக உதவிகளுக்கு பெரிய ஊக்கமாக இருந்தவர். டோண்டு போல் ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனிமேல் பார்க்கப் போவதுமில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

தொடர்புடைய அஞ்சலி இடுகைகள்:



டோண்டுவின் மரணம்- தினகரன் தலையங்கம்

அஞ்சலி – டோண்டு ராகவன் - திருமலை ராஜன்

டோண்டு ராகவன் - அஞ்சலி..!  - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்! -ப.வி.ஸ்ரீரங்கன்

டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம் - சின்னக்குட்டி

பாண்டுச் சோழன் சரித்திரம் - பினாத்தல் சுரேஷ்

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !- கோவி கண்ணன்

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். -
சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா
டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி
நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை! - சுவனபிரியன்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

Dondu Raghavan Sir, We miss you!! - பழமை பேசி

அமரர் டோண்டு ராகவன்..

டோண்டு சார் - கானா பிரபா

டோண்டு ராகவன்.- கேபிள் சங்கர்

சென்று வாருங்கள் டோண்டு - செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்!

மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக

  டோண்டு ராகவன் - சந்திரவதனா

டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்-அருண்

பதிவர் டோண்டு மரணம் - பலூன் மாமா

டோண்டு ராகவன் சார்! - உலகநாதன்
டோண்டு - துளசி தளம்

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - உஷா

டோண்டு ராகவன் சார் – அஞ்சலி-பால அனுமான்
டோண்டு ராகவன் மறைவு-பெருங்குளம் ராமகிருஷ்ணன்
டோண்டு! - சரவணகுமார்
டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள் - அருண் பிரபு
டோண்டு ராகவன் – அஞ்சலி - மலர்மன்னன்

 

 

75 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

sriram said...

ஒரு சில முறை அவருடன் பேசியிருக்கிறேன், அருமையான மனிதர்.

சாகும் வரை வேலை செய்யணும்னு சொன்ன அருமையான மனிதர், அப்படியே செய்தும் காட்டியவர்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

துளசி கோபால் said...

அடடா.... மனம் வருத்தமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் 20 அன்று நம்வீட்டு விழாவுக்கு வந்துருந்தார். ஆளை அடையாளமே தெரியலை:(

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எம்பெருமாளை வேண்டுகின்றேன்.

ரிஷி said...

வருந்தத்தக்க செய்தி. நல்ல மனிதர். எல்லாப் பின்னூட்டங்களுக்கும் அன்புடன் என்று போட்டு முடிக்கும் அவரது வழக்கம் பிடித்திருந்தது. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Agila said...

:((
RIP

- யெஸ்.பாலபாரதி said...

மிகுந்த வேதனையும் அதிச்சியையும் அடையச்செய்த செய்தி இது. :(((

சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்து, பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் புற்றுநோயிலிருந்து வெளியே வந்த கதையைச்சொன்னார். அவரின் தைரியம் எனக்கு எப்போதுமே பிடிக்கும். இதை அவரிடமே சொன்னேன். வழக்கம்போல புன்னகையை தழவவிட்டார். தனக்கு சரியெனப்பட்டதை எங்கும் சொல்வதற்கு தயங்காத அவரது தைரியம் வியக்கத்தக்கது.

ஆத்மா சந்தியடைய வேண்டுவதும், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதையும் தவிர வெரென்ன செய்துவிட முடியும்! :((

எல் கே said...

கடைசியாக மெரினாவில் நடந்த சந்திப்பிற்கு வந்திருந்தார். அவரிடம் அவருடைய சுறுசுறுப்பும் தைரியமும் யாருக்கும் வராது..

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

SathyaPriyan said...

அவரது பல கருத்துகளில் உடன்படவில்லை என்றாலும் அவரது மன உறுதி மற்றும் ஆங்கில வண்மை இரண்டும் அபாரம்.

அவரது ஆத்மா சந்தியடைய எனது வழிபாடுகளை செலுத்துகிறேன்.

அமர பாரதி said...

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

said...

அவ‌ரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகிறேன்.
ராஜேந்திரன்

அமர பாரதி said...

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

said...

என் தளத்தில் கருத்தே போடாதவர் நேற்று தனது இறுதிக் கருத்தை பதிந்திருந்தார்; டோண்டு ராகவனை பிரிந்து மனம் வாடுகின்றது.

Unknown said...

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கக்கூடாதா என்று நினைக்கிறது மனம்.

உண்மையென தனக்கு பட்டதை வெளிப்படையாக எந்த அச்சமும் இல்லாமல் சொன்னவர்.

நினைவில் என்றும் இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை காலமாக எழுதி வருகிறார்! தளராத அயராத மனம். உறுதியின் மறுபிம்பம்.
அ ஃபைட்டர். அதனாலயே புற்று நோயை வென்றிருக்கிறார்.
அவர்து குடும்பத்தை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆத்மா சாந்தி அடையட்டும்.
நெடுங்குழைக்காதனிடம் அடைக்கலமாகியிருப்பார்.

Sundar Padmanaban said...

மிகுந்த வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அஞ்சலிகள். பிரார்த்தனைகள்.

Unknown said...

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!

சிங். செயகுமார். said...

அவருடைய எல்லா பதிவுகளும் நம்மோடு ஒத்து போகவில்லை என்றாலும். நாமெழுப்பும் கேள்விகளுக்கு அவரை சார்ந்த பதிவுகளுக்கு அவர் தரும் விளக்கங்கள் என்னை மலைக்க வைத்துள்ளன்.பதிவர் சந்திப்பில் குறிப்பெடுத்துக்கொள்ள கையில் நோட்டுடன் வரும. அவரின் சுறுசுறுப்பு எல்லோர் மனதிலும் என்றும் குடியிருக்கும்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்தனை செய்வோம்

பத்மநாபன் said...

ஆழ்ந்த இரங்கல்கள் ...

கடைசிவரை வலைப்பூக்களில் உபயோகமாக பகிர்ந்து கொண்டே இருந்தார் ...திடீர் மறைவு மிக மன வருத்தம் அளிக்கிறது .....

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ...

Unknown said...

மிகவும் வருத்தமான செய்தி!

அவர்து மறைவு பதிவுலகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்.

எந்து ஆழ்ந்த இரங்கல்கள்!

பிரகாஷ் said...

அவரது பல பதிவுகளை ரசித்து வாசித்து வருகிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

மு.சரவணக்குமார் said...

கருத்து வேறுபாடுகளை மீறிய மதிப்பும், மரியாதையும் அவர் மீது எனக்குண்டு. அவர் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

வருத்தங்களுடன்

சரவணக்குமார்.

said...

ஆழ்ந்த இரங்கல்கள்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

? said...

அன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி

Radha N said...

ஆழ்ந்த இரங்கல்கள்

Krishnan said...

Felt really sad on hearing the news. He will be missed very much in Tamil blogging community. My respects to the departed soul and my condolences to his family.

ரஹீம் கஸ்ஸாலி said...

அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

அடடா!!.. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

செங்கோவி said...

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்தனை செய்வோம்

said...

நிஜமாகவா? நேற்று மாலை கூட கமெண்ட் போட்டிருக்காரே?
February 05, 2013 3:55 PM

http://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=7642119885685756339

-/சுடலை மாடன்/- said...

ஆழ்ந்த இரங்கல்கள் :-(

செல்வநாயகி said...

Too sad to hear this:((

Avargal Unmaigal said...

அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் பிராத்திகிறேன்,

-/பெயரிலி. said...

அவருடனான சமூக அரசியலுடன் என்றைக்குமே ஒத்துப்போகமுடிந்ததில்லை. ஆனால், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவெனச் சில இருந்தன.
பேஸ்புக், கீச்சுகளுக்குமுன்னான தமிழ்வலைப்பதிவுலகின் காலகட்ட நினைவுகளை எண்ணிப்பார்க்க நேரிடும் காலத்திலே, அவரின் இடம் வரவே செய்யும்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவிக்கின்றேன்.
காலம் அவர்தம் பிரிவுத்துயர்தனை ஆற்றட்டும்

சிநேகிதன் அக்பர் said...

ஆழ்ந்த இரங்கல்கள் ...

Kousalya Raj said...

அன்னாரின் மரணம் மனதை வருந்த செய்கிறது. எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா அமைதியடைய வேண்டுகிறேன்.

M Arunachalam said...

I am shocked & saddened to hear the news. Mr. Dondu Ragavan was a fearless writer and this is a loss to the blogging community.

I pray to the Almighty to give strength to his family to bear this loss. May his soul Rest in Peace.

Arun

Aashiq Ahamed said...

சலாம்,

அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

MOHAN P SIVAM said...

அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் பிராத்திகிறேன்

manjoorraja said...

வலையுலகில் இவரைபோல எதிர்ப்புகளையும் வசவுகளையும் கேட்டவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். மூத்த பதிவரான இவருடைய பல கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லையென்றாலும், தன் எழுத்து மூலம் பலரை சென்றடைந்தார் என்பதை என்றும் மறுப்பதற்கில்லை. அன்னாரின் இழப்பு வலையுலகிற்கு ஒரு முக்கிய இழப்பே. ஆழ்ந்த அஞ்சலி.

வவ்வால் said...

எ.அ.பாலா,

மிகவும் அதிர்ச்சியடைய செய்யும் செய்தி,மாற்றுக்கருத்து கொண்டவர் என்றாலும்,தனது கருத்தினை தெளிவாக சொல்லக்கூடியவர், ஆழ்ந்த இரங்கல்கள்,ஆன்மா சாந்தியடையட்டும்!

நல்லடியார் said...

டோண்டு ராகவன் அவர்களுடன் பல்வேறு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் உரையாடியுள்ளேன். மாற்றுக்கருத்துகளை மனம் வருத்தாமல் நேர்மையாக வைக்கும் பண்பாளர். அவரது திடீர்
மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மனித வாழ்வில் மரணம் அனைவரையும் அடையும் என்ற இறைநியதிப்படி. இப்பேரிழப்பை தாங்கும் வல்லமையை அவர்தம் குடும்பத்தார் பெற பிரார்த்தனைகள்.

Adirai Iqbal said...

எனது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Ganpat said...

ஒரு நல்ல தைரியமான மனிதர்.
உள்ளொன்று வைத்து புறம ஒன்று பேசத்தெரியாதவர்.அவர் ஆன்மா அமைதி அடைய பிரார்த்திக்கிறேன்.

said...

எனது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ஆன்மா அமைதி அடைய பிரார்த்திக்கிறேன்.
Nalina

Jayaprakash Sampath said...

Deepest Condolences :(

மு மாலிக் said...


ஒரு சிறந்த பிளாக்கர். ஒளிவு மறைவு இல்லாமல் கருத்துக்கள் சொன்னவர் என்ற வகையில் அவர் இறந்தது வருத்தம்.

குழந்தைகளையும் பெண்களையும் கொல்லும் இஸ்ரேல் மற்றும் மோடியின் ஆதரவாளர் என்றபட்சத்தில், அவர் இறந்ததினால் சற்று மகிழ்ச்சியே

எப்படி இருக்க வேண்டும் ஏன்பதற்கும் அவர் ஒரு உதாரணம். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் அவர் ஒரு உதாரணமே

NSK said...

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

நீங்கதான் முதலில் தகவல் சொன்னதாக கோவி.கண்ணன் குறிப்பிட்டிருந்தார்.

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கானா பிரபா said...

மிகவும் மனவருத்தத்தோடு என் ஆழ்ந்த இரங்கல்

கானா பிரபா said...

மிகவும் மனவருத்தத்துடன் என் ஆழ்ந்த இரங்கல்

enRenRum-anbudan.BALA said...

இரங்கலைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பிளாக் கவுண்ட்டர் ஓட்டத்திலும், பின்னூட்ட எண்ணிக்கையிலும் டோண்டுவின் பிராபல்யம் அவரது மரணத்திலும் தெரிகிறது!

சின்னக்குட்டி said...

ஆழ்ந்த இரங்கல்கள் ...

Bucker said...

முதன்முதலாக 4ம் தேதி தான் அவரது தளத்தில் பின்னூட்டமிட்டேன். இந்த செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

தி.தமிழ் இளங்கோ said...

பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உங்கள் வலைப் பதிவின் மூலம் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

His demise was sudden and sad.

Condolences to the bereaved family

I came to read his blog just a few years ago; and on many subjects posted comments travestying his views. He allowed all. I even corrected his Tamil once; he obliged that. On some occasions, I charged him with not being true to his religion. His return comments were sober.

The last comment about him was that I wrote in Govi Kannan's blog just a few weeks ago making the same accusation. He responded decently explaining himself. Others would have responded with quite vituperative comments. A rare quality about him is that he never stood on false prestige. He accepted his mistakes if they were bona fide.

He is not a real casteist. Under provocation he used to describe himself as a Vadagalai Iyengar but it is a show in order to tease his critics, as his close readers are aware. He never boasted about his identity. At bottom he felt one with others; and moved with them easily as evident from his relationship with Tamil bloggers w/o any discrimination, although he himself faced discrimination in one bloggers meeting.

In the altercation between him and the psychiatrist Dr Rudran and his wife, DR understood their agony and became aware he was wrong in targeting them. He apologized. Not content with mere words, he met the DR in a bloggers meeting and reconciled with him and published the photo of embrace in his blog. The reconciliation was heartfelt.

If he had had a close direct meeting with his infamous enemy Moorthy, that person would have been taken in by DR's broad mindedness. The young man mistook him for a casteist. The elder would have himself taken that step to move closer and made the younger understand. But I do not know exactly why he didn't. The bitter experience DR had wouldn't have occurred.

More often he was accused of being arrogant. But I felt in him there was deep down overwhelming humility and compassion for all. I never met him but would have liked to meet. Coz I came to TN recently and don't live in Madras.
But his end, though sudden, yet had some premonition. That I felt to my sorrow in reading his blog post in which he bid Farwell to the flesh ! (pennasai). To me, it said not merely the flesh, but the world too.

A simple man w/o any pretensions, he lived according to his conscience. It is difficult to live like that. As far as I know, he achieved that distinction. Tamil blogosphere was illuminated by him. That illumination is now dimmed.

If I were to tell him now that DR, here has come a Brahmin inveterate hater, his reply would be: 'So what, still I love you!"

That is being a true Brahmin, isn't? What more qualifications a Vadagalai Iyenagar needs? Has he not lived upto the five codes ?

DR, may the God of Shrivaikuntam (Magara Nedungulzahi Kaathar) take you and care for you!

“Break, break, break
On thy cold grey stones O sea!
I would that my tongue could utter
The thoughts that arise in me!”

-Kulasekaran

rkajendran2 said...

மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி .அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//குழந்தைகளையும் பெண்களையும் கொல்லும் இஸ்ரேல் மற்றும் மோடியின் ஆதரவாளர் என்றபட்சத்தில், அவர் இறந்ததினால் சற்று மகிழ்ச்சியே//

அன்பான மாலிக்!
என்னங்க நீங்க சொல்கிறீர்கள். மேற்குறிப்பிட்டதைச் சொன்னதால் எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை.
அதற்காக உங்கள் மரணமா? எனக்குத் தேவை.
டோண்டு அண்ணாவுடன் நான் பேசியும் உள்ளேன். அவர் கருத்துக்கள் எல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை ஆனால்
அதற்காக அவரை வெறுக்கவில்லை.பிடிக்காதவர் எல்லோரும் இறப்பதானால் உலகில் எவருமே மிகுதியில்லை.
ஆகவே "நான் என் உள்ளக் கிடக்கையை உண்மையுடன் ஒப்புவிக்கிறேன், என இப்படி எழுத வேண்டாம்.
இனிமேலாவது தவிர்க்கவும்.
அன்புடன் வேண்டுகிறேன்.

சந்தனமுல்லை said...

டோண்டு, விடாது கறுப்பு, முரளி மனோஹர்,சல்மா அயூப், சுண்டெலி பரிசோதனை, போண்டா சந்திப்பு....யோம்கிப்பூர்.....பதிவுலகில் டோண்டு என்றென்றும் நினைவுகூர‌ப்படுவார்!!

குட் பை டோண்டு!! போய்விட்டு வர முடியாத ஒரே இடம் இதுமட்டும்தான்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்!!

suvanappiriyan said...



அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html

கடுகு said...

ஈகோ இல்லாத மனிதர். அபார நினைவுத் திறன்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவ்னை பிரார்த்திக்கிறேன். -கடுகு

said...

அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்...RIP

அன்புடன் அருணா said...

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

கவியாழி said...

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

வேகநரி said...

பெரியவர் டோண்டு ராகவன் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
---------------
யோகன் பாரிஸ்,
அவருக்கு நீங்கள் வேண்டு கோள் விடுவது பயனில்லை. அவர் மதம் அப்படி தான்.அவரை பிற மக்கள் மீது வெறியோடு அலையும் படி உருவாக்கியுள்ளது.

said...

//
பிளாக் கவுண்ட்டர் ஓட்டத்திலும், பின்னூட்ட எண்ணிக்கையிலும் டோண்டுவின் பிராபல்யம் அவரது மரணத்திலும் தெரிகிறது!
//
நான் கவனித்ததில், எ.அ.பாலாவின் வலைத்தள பிளாக் கவுண்ட்டர் எண்ணிக்கை ஒரு நாளில் 1700-க்கும் மேல் எகிறியிருக்கிறது. டோண்டு தமிழ் வலை உலக சச்சின் தெண்டுல்கர் என்பது அன்னாரின் மரணத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

K.R.அதியமான் said...

நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.

ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.
கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.

மாயவரத்தான் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

:(


மு. மாலிக் என்ற இத்துப்போனவனின் கமெண்ட்டை நிராகரித்திருக்கலாம் பாலா சார்.

அந்தப்படி பார்க்கப் போனால் உலகம் முழுக்க தீவிரவாதத்தை வளர்ப்பவர்களை ஆதரிக்கும் மாலிக் என்ற நாதாறியின் மரணத்தை உலகமே சந்தோஷமாக எதிர் நோக்கும் என்று சொல்லலாமா?

Amudhavan said...

டோண்டு அவர்களின் எழுத்துக்கள் இணையத்தில் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. அதனால் அவரது எழுத்துக்களை புத்தகவடிவில் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை ஒரு தளத்தில் படித்தேன்.(அநேகமாக இக்பால் செல்வன் தளம் என்று நினைக்கிறேன்) இந்தக் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.திரு பாலா போன்றவர்களும் மற்றவர்களும் இதற்கான முயற்சிகளை எடுப்பார்களேயானால் அவருக்குச் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக அது இருக்கக்கூடும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தயவு செய்து அன்பர் மாலிக்கின் பின்னூட்டத்தை அன்பர் கி.ரமேஷ்குமார் கூறுவது போல் எடுத்துவிட வேண்டாம்.
அப் பின்னூட்டம் "திருஸ்டிப் பொட்டுப்" போல் இருக்கட்டும்.
டோண்டு அண்ணாவின் எழுத்தின் வீச்சின் சான்றது.

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by the author.
enRenRum-anbudan.BALA said...

மாயவரத்தான்,
நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டத்திற்கு யோகன் சரியான பதில் அளித்து விட்ட காரணத்தாலும், அதை பெரிதுபடுத்த விரும்பாததாலும், அப்படியே விட்டு விட்டேன். அவ்வளவு தான்.

enRenRum-anbudan.BALA said...

//திரு பாலா போன்றவர்களும் மற்றவர்களும் இதற்கான முயற்சிகளை எடுப்பார்களேயானால் அவருக்குச் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக அது இருக்கக்கூடும்.
//
முயற்சிக்கிறேன், அமுதவன். நன்றி.

enRenRum-anbudan.BALA said...

இரங்கலைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. டோண்டு சார் மீதும் அவர் எழுத்துகள் மீதும் இங்கு பலர் மதிப்பு வைத்திருந்தது புரிகிறது.

said...

முதலில் அனுதாபங்கள். அவருடைய கருத்துக்கள். அவருடையது.

அவர் தன் சாதி சார்ந்தே உலகத்தைப் பார்த்தாரே தவிர மனச்சாட்சி இல்லாமல் எழுதினார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் ஒரு மனச்சாட்சி உள்ள மனிதன் அல்ல. சாதி வெறியை நியாயப்படுத்த வார்த்தைகளை மாற்றி மாற்றி எழுதினார்.


அவருடைய மறைவு குடும்பத்தினருக்கு பெரிய இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழினத்திற்கு அல்ல.

புள்ளிராஜா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails